தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் சமூகம் நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்துடன் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கைதிகளை விடுதலை செய்வது குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யாரை முன்னதாக விடுதலை செய்வது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல கைதிகளுக்கு எதிராக இதுவரையில் வழக்குத் தொடரப்படவில்லை எனவும். பலர் சந்தேகத்தன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி அமைச்சருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.