தொலைபேசி அழைப்பு விபரங்களைத் திரட்ட உத்தரவு
தாஜூதீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் படி கிருலப்பனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ரக்பி வீரரின் உடலில் காபன் மொனக்சைட் காணப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்கள அறிக்கையின் படி அவருடைய மரணம் வேறுவிதமாக சம்பவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்பாடாகக் காணப்படும் இந்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஏற்கனவே சட்டமா அதிபரின் ஆலோச னையைப் பெற்றிருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் அறிவித்தது.
அதேநேரம், ரக்பி வீரர் வkம் தாஜூ தீனின் கையடக்கத்தொலைபேசிக்கு வந்த மற்றும் அவர் ஏற்படுத்திய அழைப்புக்கள் குறித்த விபரங்களைத் திரட்டுமாறு நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.
தாஜூதீனின் தொலைபேசி தொடர்பான தகவல்களை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு மற்றும் தனியார் தொலைபேசி நிறுவனங்க ளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு அறிவித்து ள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப் பட்டதுடன், அன்றையதினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிக்குமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்தது.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வkம் தாஜூதீன் விபத்துக் குள்ளாகி உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இது தொடர்பில் அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை இரண்டு வருடங்களின் பின்னர் வெளியிடப்பட் டிருந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங் கக்கோன் பொலிஸருக்குப் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப் பிடத்தக்கது.