புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அடுத்த மாதம் முதல் வழங்க ஏற்பாடு ஞாயிறு பத்திரிகைகளில் விண்ணப்பப்படிவங்கள்


ற்கான விண்ணப்பங்கள் வார இறுதி பத்திரிகைகளில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்தது. ஊடகவியலாளர்கள் மோட் டார் சைக்கிள் பெற சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம் என்ற நிபந்தனை ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு 5 வருட சேவை காலமும் தகவல் திணைக்கள அடையாள அட்டையும் இருக்கும் சகலருக்கும் இதனை வழங்க இருப்பதாக தகவல் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரனவிதாரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவி யலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, அலுவலக ஊடகவியலாளர்கள் மட்டு மன்றி சுதந்திர ஊடகவியலாளர் பிராந்திய ஊடகவியலாளர் போன்றவர்களுக்கு சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்களை வழங்க திட்டமிடப்பட்டுள் ளோம்.
இதற்கான நிபந்தனைகள் அடங்கிய சகல விபரங்களும் வார இறுதி பத்திரி கைகளில் விபரமாக வெளியிடப்படும். ஊடக அமைச்சு இதற்கான விண்ணப் பங்களை வெளியிடும். 5 வருடங்கள் வரை மோட்டார் சைக்கிளை எவருக்கும் கைமாற்ற முடியாது என்றார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக,
சிறுபான்மை அரசாக இருந்து கொண்டு ஊடகவியலாளர்களின் நலனுக்காக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். ஊடகவியலாளர்களின் கனவுகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் கீழ் காணியை அளவிடும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆசிர்வாதத்துடன் விரைவில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின் முதலீட்டாளர்களை அடையாளங்கண்டு துரிதமாக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
இதற்கான காணி ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக கிடைக்க இருப்பதோடு வீட்டுக்கான தொகையே பெறப்பட வுள்ளது என்றார்.

ad

ad