புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானதே: நெஸ்லே நிறுவனம் விளக்கம்



 மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்றும், உலகம் முழுவதும் ஒரே தரத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது என்றும் நெஸ்லே
நிறுவனத்தின் சர்வதேச சிஇஓ பால் பல்க் விளக்கம் அளித்துள்ளார்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டில் அளவுக்கு அதிகமான ரசாயன உப்பு (மோனோசோடியம் க்ளூட்ட மேட்) மற்றும் ஈயம் (லெட்) கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகி நூடுல்ஸ் குறித்து நெஸ்லே நிறுவனத்தின் சர்வதேச சிஇஓ பால் பல்க் இன்று விளக்கம் அளித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகி விவகாரத்தில் நுகர்வோரின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். இந்தியாவில் 30 ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய நிறுவனமாக மேகி நூடுல்ஸ் திகழ்ந்துள்ளது. 
 
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது. உலகம் முழுவதும் ஒரே தரத்தில் நூடுல்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதே தரம் தான் உலக அளவில் வழங்கப்படுகிறது. மேகி பயன்படுத்த உகந்த உணவு பொருள்.

மேகி நூடுல்ஸ் உள்பட நெஸ்லே தயாரிப்புகளில் எம்எஸ்ஜி வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆய்வு முடிவுகள் அனைத்திலும் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என கண்டறியப்பட்டுள்ளது.

மோனோசோடியம் க்ளூட்ட மேட் மேகி நூடுல்ஸில் சேர்க்கப்படாது. மோனோ சோடியம் க்ளூட்ட மேட் வேதிப்பொருள் இல்லை என்ற வாசகம் விலக்கிக் கொள்ளப்படும் என்றார்.

ad

ad