புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2015

தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்தவர் கந்தையா சிவராஜா


தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது உழைத்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களுக்கு அகவணக்கம் செலுத்துவதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அர்பணிப்புடன் பணி செய்த நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்கள் 31 .05 .2015 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.
எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் நாட்டுப் பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.
சவால்கள் மிகுந்த காலகட்டத்தில் தமிழ்த் தேசியத்துக்காக நெறிபிறழாது பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு உறுதுணையாக நின்றவர்களில்
நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்கள் முதன்மையானவர்.
தமிழீழ விடுதலைக்காய் அர்ப்பணிப்புடனும் இதயசுத்தியுடனும் உழைத்தவர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.
அந்த வகையில் அமைதியாகக் கண் மூடியுள்ள நாட்டுப்பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செல்லுத்தும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad