இலங்கையில் அரசியல் கைதிகள் என்று ஒருவரும் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றபோதும் குற்றச்சாட்டுக்களின் பேரில் 300 அரசியல் கைதிகள் வரை பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிஸக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார இதனை தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்து திரும்பிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களாவர்.
விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சுதந்திரமாக நடமாடித்திரியும்போது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அஜித்குமார தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கும் சமவுரிமை இயக்கத்தின் நடவடிக்கையின் ஒருக்கட்டமாகவே அஜித்குமார வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.