புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பில் மகிந்தா மகன் யோசித்த கைதாகும் சாத்தியம்?


பிரபல றகர் விளையாட்டு வீரரான மொஹமட் தாஜூடீனின் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
றகர் விளையாட்டு வீரர் தாஜூடீனை தாக்கி கொலை செய்து, காருக்குள் போட்டு எரியூட்டிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவற்துறை தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அரசியலவாதியின் மகனது தேவைக்கமைய தாஜூடீன் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரபல அரசியல்வாதியின் சாரதி உள்ளிட்ட குழுவினரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாஜூடீன் கொலை தொடர்பான சகல தகவல்களையும் திரட்டி வருவதாக காவற்துறையின் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொடவை கடத்திச் சென்று காணாமல்போக செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் தொலைபேசிகள் என கருதப்படும் 22 தொலைபேசி இலக்கங்கள் காவற்துறையினருக்கு கிடைத்துள்ளன.
தாஜூடீன் கொலை தொடர்பாக காவற்துறையினர் ஆரம்பத்தில் விசாரணைகளை சரிவர நடத்தவில்லை என்பதால், குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர்.
திடீர் விபத்து காரணமாக தாஜூடீனின் மரணம் சம்பவித்ததாக காவற்துறையினர் அப்போது கூறியிருந்தனர்.
எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் நடத்திய விசாரணைகளில் தாஜூடீன் கொலை செய்யப்பட்டு சடலம் அவரது காரில் போடப்பட்டு எரியூட்டப்பட்டதாக தெரியவந்தது.
றகர் விளையாட்டு வீரர் தாஜூடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யோஷித்த ராஜபக்ச காதலித்த பெண் ஒருவர் தாஜுடீனின் நெருங்கிய தோழியாக இருந்துள்ளார்.
தனது காதலியுடன் தாஜூடீன் தொடர்புகளை வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் யோஷித்த ராஜபக்ச, தாஜூடீனை கொலை செய்ததாக பேசப்படுகிறது.

ad

ad