புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

நடிகர் சங்கத் தேர்தலை விட்டு ஓட நாங்கள் கோழையல்ல: சரத்குமார்


 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நிதி அளிக்கும் விழா பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். சரத் ஆனந்த், பால்ராஜ், ஜார்ஜ், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பாளையங்கோட்டை பகுதி செயலாளர் சின்னத்துரை வரவேற்று பேசினார். கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நிதியை பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– 

இளைஞர்கள் அரசியலுக்கு அதிக அளவில் வரவேண்டும். அரசியல் சாக்கடை அதனால் நாங்கள் வருவதில்லை என்று சிலர் கூறுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்கிறேன். அந்த சாக்கடையை நீங்கள் நினைத்தால் சுத்தம் செய்ய முடியும். அரசியலுக்கு வருகிற இளைஞர்களை வழிநடத்துகின்ற பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு உள்ளது.  இவ்வாறு ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார். 

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நடிகர் சங்கத்திற்கு நாங்கள் பொறுப்புக்கு வரும்போது சங்கம் கடனில் இருந்தது. அதை அடைத்து உள்ளோம். சங்க கட்டிடம் கட்டுவது குறித்த ஒப்பந்தம் குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் பேசப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தத்தால் சங்கத்திற்கு வருமானம்தான் வரும். இந்த ஒப்பந்தம் குறித்து எங்களிடம் யாரும் பேசவில்லை. 

2013–ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் இன்று குற்றம் சாட்டுகிறவர்கள் சிறந்த தலைமை என்று பாராட்டி பேசினார்கள். நான் கடந்த முறையே பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன் என்றேன். அப்போது அவர்கள் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்கள். இப்போது கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் போவேன் என்று கூறி இருக்கிறேன். ஏற்கனவே செயற்குழுவில் சூர்யா, சிம்பு உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். 

எங்கள் மீது சாட்டுக்கின்ற குற்றச்சாட்டு உண்மையானது அல்ல. அவர்களும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று வரட்டும். அதை நாங்கள் தடுக்கவில்லை. நடிகர்களிடம் ஒற்றுமை வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட்டு ஓடுவதற்கு நாங்கள் கோழையல்ல. 

சங்கத்தில் அரசியல் கலந்துவிட்டதாக கூறுகிறார்கள். நடிகர் சங்க தேர்தல் அரசியலை புரட்டி போட்டு விடாது. விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் அமைக்கும் பணி 30 சதவீதம் முடிவடைந்து உள்ளது.கூறினார்.

ad

ad