புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

மஹிந்த மைத்திரி இணைக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வி?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருவரையும் இணைக்கும் நோக்கில் ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பிரதமர் வேட்பாளர் பதவியை வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அதனை விடவும் பொறுப்புடைய ஏதேனும் பதவி ஒன்றை வழங்க முடியும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் மூன்று நாடுகள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளது, இதனால் தாமும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக மைத்திரிபால சிறிசேன, குழுவிடம் தெரிவித்துள்ளதாக சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ad

ad