புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 5 தமிழர்கள் கைது- 70 பேர் தப்பி ஓட்டம்




 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வானத்தை நோக்கி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு வனத்தில் இருந்து 70 பேர் தப்பி ஓடினர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சந்திரகிரி மண்டலம் நடுமபள்ளி வனத்தில் செம்மரம்  வெட்டியவர்கள் தப்பி ஓடியதாக தகவல் வந்துள்ளது. செம்மரம் வெட்டும்போது கைதான 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வந்துள்ளது. 

ஆந்திரா கடப்பாவில் வாகன சோதனையில் ரூ.8 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 கார், 1 லாரி, செம்மரம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளதாக கடப்பா மாவட்ட எஸ்.பி.நலான்குட்டி தகவல் தெரிவித்துள்ளார். கடத்தல் மன்னன் கங்கிரெட்டியின் கூட்டாளி சிவசங்கர்  தலைமையில் கடத்தல் நடந்துள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார். 

இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  பறிமுதலான  செம்மரத்தின் மதிப்பு ரூ.8 கோடி என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad