புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2015

உலக தமிழர் பேரவையின் மாநாட்டை புறக்கணிக்கும் சந்திரிக்கா

உலக தமிழர் பேரவை அடுத்த மாதம் டுபாயில் நடத்தவுள்ள மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் இடம்பெற்ற புலம்பெயர் சந்திப்புக்குப் பின் உலகத் தமிழர் பேரவையின் தலைமையில் மற்றுமொரு மாநாடு டுபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் இலங்கையின் தெற்கு பகுதி அரசியல் தலைவர்கள் சிலரை அழைக்க உலகத் தமிழர் பேரவை தீர்மானித்துள்ளது.
அத்தலைவர்களின் பட்டியலில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உலகத் தமிழர் பேரவையின் இந்த அழைப்பை சந்திரிக்கா முழுமையாக நிராகரித்துள்ளார்.
உலக தமிழர் பேரவை எனும் தமிழ் புலம்பெயர் பிரிவு ஒரு அமைப்பு இல்லை என்பதால் சந்திரிக்கா இந்த அழைப்பை நிராகரித்ததாக சந்திரிக்காவிற்கு நெருங்கிய ஒருவர் குறிப்பிட்டார்.
லண்டனில் அதிகம் வசித்தவர் என்ற வகையில் புலம்பெயர்வாளர்கள் தொடர்பில் சந்திரிக்கா நன்கு அறிவார் என்றும் சிறு குழுக்களின் வியாபார நோக்கங்களுக்கு துணை போக முடியாது என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாகவும் சந்திரிக்காவுக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்த போதிலும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து முறையான செயற்பாடு ஒன்றை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad