புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

கொலம்பிய வீரருடன் மோதல்: நெய்மருக்கு 4 போட்டியில் தடை (வீடியோ இணைப்பு)


கொலம்பிய வீரர் பாபியோவை தாக்கிய பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, நான்கு போட்டிகளில் விளையாட தடை மற்றும் ரூ. 6.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலியில் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் கொலம்பியாவுடனான லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியைத் தழுவியது.
இந்த தோல்வியை நெய்மரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் போட்டி முடிந்த பிறகு பந்தை வேகமாக உதைத்தார். அது எதிரணி வீரர் பாபியோவின் முதுகில் பலமாக தாக்கியது.
இதை தட்டிக் கேட்ட மொரில்லோ தலை மீது, தனது தலையால் மோதினார் நெய்மர்.
இதைப் பார்த்த கொலம்பிய வீரர் பாக்கா ஓடிவந்து நெய்மர் முதுகில் கையை வைத்து வேகமாக கீழே தள்ளிவிட்டார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு விசாரணை நடத்தியது. இதில் நெய்மருக்கு 4 போட்டிகளில் பங்கேற்க தடையும், 1000 USD அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், நெய்மரை தள்ளி விட்ட கொலம்பிய வீரர் பாக்காவுக்கு இரு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
நெய்மருக்கு 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருப்பதால் பிரேசில் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து நெய்மர் அப்பீல் செய்யவுள்ளார்.

ad

ad