புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2015

மைத்திரியின் யோசனையை நிராகரித்தார் மஹிந்த!


அரசியலை கைவிட்டால் மரியாதைக்குரிய பொறுப்பு ஒன்றை வழங்க ஜனாதிபதி முன்வந்தமையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.
இந்த யோசனை மஹிந்த- மைத்திரி இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஊடாக மஹிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதனை நிராகரித்துள்ள மஹிந்த ராஜபக்ச மக்கள் தம்மை காப்பாற்றுவதற்காக மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கோருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம், விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த 6 பேர் இணைப்புக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உயர் பதவிகளில் இருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் நிதியமைச்சின் செயலாளர் பி பி ஜெயசுந்தர ஆகியோரும் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மஹிந்த-மைத்திரி இணைப்பு 6 பேர் குழுவினருடன் இணைந்து சென்ற இந்த இரண்டு அரச அதிகாரிகளும் ஜனாதிபதியிடம் தமது முறைப்பாட்டை செய்துள்ளனர்.

ad

ad