எப்போதும் எந்த வேளையிலும் அனைத்து விடயங்களிலும் வட மாகாண முதலமைச்சருடன் சேர்ந்து இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு என்றும் பக்கபலமாக இருப்பேன் எனத் தெரிவித்துள்ள சிaதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவொரு பிளவும் இல்லையெனவும் தமிழரசுக் கட்சியினர் வட மாகாண முதலமைச்சருடன் புரிந்துணர்வு அடிப்படையிலும் வலுவான ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறார்கள் எனவும் முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எமக்கும் எமது மக்களுக்கும் கிடைத்த பெரும் சொத்தாகும். வெளிப்படைத் தன்மையுடனும் யாருக்கும் அஞ்சாது தமிழ்த் தேசியத்தின் கொள்கைகளை எங்கேயும் எவ்வேளையிலும் ஆணித்தரமாக தெரிவிக்கக் கூடியவர் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறினார்