புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2015

குறுக்கு வழியில் நாடாளுமன்றத்திற்கு வரும் கடும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தொகுதி ஒன்றில் போட்டியிடாது தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
தேர்தல் தொகுதி ஒன்றில் போட்டியிட்டால் தான் கடும் சவாலை எதிர்நோக்க நேரிடும் என மகிந்த ராஜபக்ச கருதுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் தன்னை இலக்கு வைத்து நேரடியான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படலாம் எனவும் அதனை தனியாக எதிர்கொள்வது சிரமமானதும் என்பதுடன் பாதிப்பாகவும் அமையும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலேயோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயோ தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அவரை புதிய கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் களமிறங்க அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன செயலாளராக இருந்து வரும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாற்காலி சின்னத்தின் ஊடாக போட்டியிட மகிந்த ராஜபக்ச கோஷ்டியினர் முயன்று வருகின்றனர்.
எனினும் நாற்காலி சின்னத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குவது குறித்து டி.எம். ஜயரத்ன இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது

ad

ad