புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2015

ஊழல் விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்


நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிராக போலி விமர்சனங்கள்

கடந்த கால ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட வர்களுக்கு எதிரான விசார ணைகளை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை முறியடிக்க சகலரும் ஒன்றிணைய வேண்டுமென ஜே.வி.பி அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமாகவிருந்த முன்னாள் அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு எதிரான பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப் பட்டிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊழல் மோசடி விசாரணைகளைத் தடுக்கும் நோக்கத்துடனேயே அரசியல மைப்புசபை நியமிக்கப்படுவதை முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டாலே ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத் தப்படும். புதிய ஆணைக்குழு நிறுவப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பு சபையை நியமிக்கும் முயற்சிகள் ராஜபக்ஷ குழுவினரால் பாராளுமன்றத்தில் குழப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஊழல் விசாரணைளைத் தடுக்கும்
 ராஜபக்ஷ குழுவினரின் செயற்பாடுகளுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மந்த கதியிலான நடவடிக்கைகள் மேலும் வலுச்சேர்க்கும் வகையில் அமைந்தி ருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மஹிந்தவுக்கு நெருக்கமான தென் மாகாணசபை உறுப்பினர் உப்புல் என்பவர், தமது அரசாங்கம் பதவிக்கு வந்ததும் நிதி மோசடி விசாரணைப் பிரிவைச் சேர்ந்த பிரதிப் பொலிஙி;மா அதிபர் உட்பட அத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் கல்வீசிக் கொல்லப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். இது பாரதூரமான கருத் தாகும். அவர்களின் இலக்கு தற்பொழுது தெளிவாகியுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித் திருந்த காலப் பகுதியில் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. அதேபோல நாட்டில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவு, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அமைக்கப்பட்டபோது கேள்வியெழுப்பாதவர்கள் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அமைக்கப்பட்டது பற்றி கேள்வியெழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அமைக்கப் பட்டதாக சிலர் கூறுகின்றனர். வர்த்தமானி மூலம் இந்தப் பிரிவு அமைக்கப்பட வில்லை.
நிதி மோசடி விசாரணைக்கென குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி ஊடாக அரசாங்கம் அறிவித்தது. வர்த்தமானி என்பது அரசாங்கத்தின் பத்திரிகை. அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் அதன் மூலம் வெளியாகியுள்ளது. இது கூடத் தெரியாமல் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட வேண்டும் என்ற கருத்துக்களைக் கூறி வருவதாகவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரச வளங்கள், ஊடகங்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட சகலவற்றையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு நடத்திய தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருப்பதால், இனி எந்தவொரு தேர்தலிலும் அவர் வெற்றிகொள்ள மாட்டார்.
தனது குடும்பத்தாருக்கும், தனக்கு நெருக்கமான வர்களுக்கும் எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே குழுக்களை உருவாக்கி மக்கள் மத்தியில் அரசியல் கருத்துக்களை விதைத்து வருவதாகவும் ஜே.வி.பியின் தலைவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சிகளைத் தடுப்பதற்கு பொறுப்புவாய்ந்தவர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதியும், பிரதமரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சபாநாயகரின் இல்லத்தில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பிரதமர் நாட்டு மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

ad

ad