8 ஜூன், 2015

தலை வேறு முண்டம் வேறு : எழுதுமட்டுவாளில் சடலம் மீட்பு


ஏ-9 வீதியின் எழுதுமட்டுவாள் புகையிரத நிலையத்துக்கு அருகில் சுமார் 200 மீற்றர் இடைவெளியில் தலையும் முண்டமும் வெவ்வேறான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று  இரவு மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த சடலத்தை மீட்ட பளைப் பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
 
மேலும் தலை காணப்பட்ட இடத்தில் ஒரு சோடி செருப்பும் பியர் ரின்னும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சடலத்துக்குரியவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன