புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூன், 2015

மகளிர் உலகக் கால்பந்து போட்டி கனடாவில் ஆரம்பம்


மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி கள் கனடாவின் வான்கோவர் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. 4 வாரங்கள்
நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை 8 அணிகள் கூடுதலாக பங்கேற்றுள்ளன. 24 அணிகளும் பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்க ளைப் பிடிக்கும் அணிகளும், தவிர 3ஆவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும்.
முதல் ஆட்டத்தில் சீனாவை கனடா அணி 1-0 என வென்றது. 2ஆவது ஆட்டத்தில் நியு+சிலாந்து நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டிகளை பார்ப்பதற்காக இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகளை விற்று தீர்ந்துள்ளன.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் (பி/பா) நடைபெற்ற மிகப்பெரிய ஊழல், கால்பந்து உலகை உலுக்கியிருக்கும் நிலையில் இந்தப் போட்டி ஆரம்பிப்பதற்கு நேர்மறையானதாக பார்க்கிறேன் என்று கனடா கால்பந்து சங்க தலைவர் விக்டர் மான்டாக்லியானி தெரிவித்துள்ளார்.

ad

ad