8 ஜூன், 2015

கைது செய்வதை தடுக்குமாறு கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு.உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது.
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உச்சநீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டீ ஆப்ரூ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.