8 ஜூன், 2015

இலங்கைக்கு வெளியில் அனைத்து சமூகங்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் பேசினோம் கூட்டமைப்பு உலகதமிழர் பேரவை அறிக்கை

லண்டனில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், உலகத் தமிழர் பேரவையும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.
அவ்வறிக்கையில்,
இலங்கைக்கு வெளியில் அனைத்து சமூகங்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக லண்டனில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகியவை கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் உட்பட ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் தேவை குறித்தும், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோரினால் விவாதிக்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்தின் போது இலங்கையில் உள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் பல்வேறு தேவைகள் குறித்து கோரிக்கை முன்வைக்க வேண்டும் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பதே இதன் நோக்கமாகும்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது குறித்தும் நீதி அமைச்சிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் புலம் பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு தடை விதித்தமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவையினால் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை புலம்பெயர் அமைப்பின் சிறப்பான திறன் மற்றும் திறன்களை பயன்படுத்தி உதவ முடியும் என கலந்துரையாடல் மூலம் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.