புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்; வடக்கு அவையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்

 வவுனியா மாவட்ட அரச அதிபரைஉடனடியாக மாற்ற வேண்டும்  என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள்  மற்றும்  உறுப்பினர்களும் 
ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.

வடக்குமாகாண சபையின்  30 ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு அவைத்தலைவர்  சீ.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.  இதன்போதே இந்த ஆட்சேபனையினை வெளியிட்டனர்.

வவுனியா அரச அதிபர்  மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவமதித்திருந்தார். இதனையடுத்து வடக்கு மாகாண சபையில்  குறித்த விடயம் எடுக்கப்பட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அரச அதிபரை மாற்ற நடவடிக்கை எடுப்பது என்றும்  தீர்மானம்  எடுக்கப்பட்டது.

எனினும் இதுவரை அவரை மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே அதற்கான நடவடிக்கையினை மிகவிரைவில் எடுக்க வேண்டும்  என அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அவைத்தலைவரின்  முன்னால் தங்களுடைய இருக்கைகளை விட்டு எழுந்து சென்று தங்களுடைய ஆட்சேபனையினை வெளியிட்டனர்.


இதன்போது பதிலளித்த அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம்  தெரிவிக்கையில்,

சபையில் எடுக்கப்பட்ட கண்டன தீர்மானம் மற்றும் உறுப்பினர் லிங்கநாதனின் கடிதமும்  வடக்கு முதல்வர் க.வி. விக்கினேஸ்வரனிடம் வழங்கப்பட்டது.  அண்மையில்  பிரதமருடன்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற   உறுப்பினர்கள் சந்திக்க இருந்தனர். அவர்களூடாக பிரதி பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும்  இதுவரை அரச  அதிபருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வடக்கு மாகாண அவையின்  சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.  எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து உறுப்பினர்  சிவாஜிங்கம்  தெரிவிக்கையில்,

அரச அதிபர் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு அவை கோருவது இனவாதம் அல்ல . குறித்த அரச அதிபர் பெரும்பான்மையானவர் என்பதால் மாற்றுமாறு நாம் கேட்டகவில்லை.  இது தமிழ்  பேசும்  ஒருவராக இருந்தால்  கூட இவ்வாறு செய்யுமாறே வலியுறுத்துவோம்.

எந்த இனத்தவராக இருந்தாலும்  தவறாக செய்பவர்களுக்கு  எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் என்றும்  அவர் மேலும்  தெரிவித்தார்.

ad

ad