புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

பிணை பெற்று தருவதாக கூறி வழக்கறிஞர் பண மோசடி.


சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களிற்கு பிணை பெற்றுத் தருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் பண மோசடி செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இவ் விடயம் தெடர்பாக தெரியவருவதாவது,
 
கடந்த மாதம் நீதிமன்ற கட்டிடத் தொகுதி கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்டது. இதனையடுத்து இப் பிரச்சணை தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் சுமார் 140 பேர் வரை கைது செய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 47 சந்தேக நபர்களின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்து.
 
குறித்த 47 சந்தேக நபர்களில் பதினொரு பேரிற்கு பிணை பெற்றுத் தருவதாக கூறி அவர்களது உறவினர்களிடம் ஒவ்வொருவரிற்கும் தலா 5ஆயிரம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக குறித்த வழக்கறிஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
இந் நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது குறித்த வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் குறித்த சந்தேக நபர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்கறிஞர் இன்றைய தினம் நீதிமன்றிற்கு வருகைதராமையினாலேயே இப் 11 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

ad

ad