புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூன், 2015

போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை உடன் முறியடிக்கவும்! பொலிசாருக்கு நீதிபதி உத்தரவு!


இளவாலை பிரதேசத்தில் பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா கடத்தல் வழக்கில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசரணையின்போது, அங்கு இடம்பெறுகின்ற பாரிய போதைவஸ்து கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களைக் கைது செய்து நியாயதிக்கமுள்ள நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இளவாலை பகுதியில் வீதிகளில் சண்டித்தனங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு  அறிவுறுத்தியுள்ள அவர், வீதிகளில் மாணவிகள் பெண்களைப் பின்தொடர்ந்து சென்றும், அவர்களைத் துரத்தியும் தொந்தரவு செய்பவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்வதுடன், சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல் செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும்  பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்;.

பாடசாலை மாணவர்களைப் போதைப்பழக்கத்திற்கு உள்ளாகச் செய்வதற்காகப் பாடசாலைகளுக்குள் போதைப் பொருட்கள் செல்வதைத் தடுப்பதற்குத் தேiவான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்றும் இளவாலை பொலிசாருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் மாணவர்கள் மத்தியில் பரவுவதைத் தடுப்பதற்காக, பாடசாலைகளின் எதிரில் நிறுத்தி வைக்கப்படுகின்ற வாகனங்களை திடீர் சோதனை செய்ய வேண்டும் என்றும், பாடசாலை இடைவேளையின்போது வெளியில் வரும் மாணவர்கள் அருந்துவதற்காக விற்பனை செய்யப்படுகின்ற சிற்றுண்டி வகைகள், மாங்காய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் திடீர் சோதனை இடுவதுடன், பாடசாலை அதிபரின் ஒத்துழைப்புடன் மாணவர் தலைவர்களைக் கொண்டு பாடசாலைக்குள் செல்லும் மாணவர்களின் பொதிகள், பேனை பென்சில் பெட்டிகள் போன்றவற்றைச் சோதனையிட்டு, டொபி மற்றும் இனிப்பு வகைள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுவதைத் தடுக்குமாறும் பொலிசாருக்கு நீதிபதியினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடசாலை நடைபெறும் நேரங்களிலும், பாடசாலையின் இடைவேளைகளின்போதும், பாடசாலைகளுக்கு எதிரிலும் அண்மையிலும் வாகனங்களை எவரும் நிறுத்தி வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இளஞ்செழியன், அவற்றை வேறிடங்ளில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பாடசாலை ஆரம்பாகின்ற வேளையிலும் பாடசாலைகள் முடிந்து மாணவர்கள் வெளியில் வருகின்ற நேரத்திலும் வாகனங்கள் அவர்களை ஏற்றிச் செல்வதற்காக வருவதற்கு அனுமதிக்குமாறு அவர் பொலிசாருக்குத் அறிவுறுத்தியுள்ளார்.

மன்னார் வழியாக வந்து மாதகல் பிரதேசம் ஊடாக இளவாலைக்குள்  கொண்டு வரப்டட்ட போதைப் பொருட்கள் தொடர்பில் பலரைக் கைது செய்து சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருப்பதாக நீதிபதியிடம் இளவாலை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிணை மனு தொடர்பான மேல் விசாரணையை நீதிபதி பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்

ad

ad