புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

சிலாபம் தெமடபிடியவில் சம்பவம்

சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில்
ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 03 மாணவர்கள் ஆரம்ப சிகிச்சை பிரிவிலும் இரண்டு மாணவர்கள் கண் சிகிச்சை பிரிவிலும் அனுமதி க்கப்பட்டுள்ளனர்.
எனினும் எந்த மாணவர்களுக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடலில் இரசாயனத் துகள்கள் இருந்துள்ளது எனினும் இதனால் எந்தவித
பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad