புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் அனந்தி வெறுமனே குற்றம் சாட்டுகிறார்! மாவை சேனாதிராசா


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கின்ற வேளையில், அனந்தி சசிதரன் அதற்கான விண்ணப்பத்தை தங்களிடம் ஒப்படைக்கவே இல்லை.
இருந்தும் அவர் தன்னை பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் மாவை சேனாதிராஜா வினா எழுப்பினார்.
அத்துடன் சில ஊடகங்கள் முன்பாகவும், வெளிநாடுகளுக்கும் சென்று கட்சியின் தீர்மானத்திற்கு எதிரான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்துவரும் அனந்தி சசிதரனுக்கு எதிராக கட்சியின் தலைமை இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பினராகவும் இருந்து கொண்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசு கட்சியிடம் வேட்பாளர் நியமனம் தருமாறும் கேட்கவில்லை. ஆனால் ஊடகங்களில் தன்னுடைய வேட்பாளர் நியமனத்தை நாங்கள் தடுத்தோம் என கூறிக்கொண்டிருக்கிறார்.
அவருக்காக நாங்கள் வருந்துகிறோம். அவர் தன்னுடைய அனேகமான வேலைகளை ஊடகங்கள் வாயிலாகவே செய்கிறார்.
மேலும் அனந்தி, தமிழரசு கட்சியின் உறுப்பினர், கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாகாணசபை உறுப்பினரும் கூட. ஆனால் அவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும் செயற்பட்டிருக்கின்றார்.
குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையை அனந்தியின் வாகனத்தில் கொண்டுவரப்பட்டே எரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழரசு கட்சியின் செயற்குழுவில் அனந்தி மீது ஒழுக்காற்ற நடவடிக்கை எடுப்பதற்கு கடிதம் அனுப்பப்பட்டபோதும், அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.
இந்நிலையிலும் நாம் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ, அவருடைய மாகாணசபை உறுப்பினர் பதவியை பறிக்கவோ தீர்மானிக்கவில்லை.
இந்நிலையில் ஊடகங்களிடம் சென்று தனது நியமனத்தை நாங்கள் தடுத்துவிட்டோம். என கூ றுவது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
இதேவேளை நாம் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதா, இல்லையா? என்பது தொடர்பாக பேசியிருந்தோம்.
இதன்படி கட்சி தலைவர்களுக்கு மட்டும் அந்த உரித்தை நாம் வழங்கியுள்ளோம். இதனை விடுத்து ஊடகங்களுக்கு பேசுவதை அனந்தி நிறுத்தவேண்டும்.
அனந்தி தனது பல செயற்பாடுகளை ஊடகங்கள் வாயிலாகவே மேற்கொண்டு வருகின்றார். மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை நானும் சுமந்திரனும் பெற்றுக் கொடுத்திருந்தோம் என்றார்.
வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடுவது தொடர்பாக வடக்கு, கிழக்கிற்கு மாகாணங்க்ளுக்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை பரிசீலித்து வருவதாக கூட்டமைப்பு மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்புத் தலைமைகள் மற்றும் பிற மாகாணங்களில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறோம்.
இது தொடர்பில் இன்னும் சில திங்களில் முடிவு எடுத்து அறிவிப்போம் எனவும் மாவை சேனாதிராஜா மேலும் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் போட்டியிட வேண்டும் என விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மாவை இவ்வாறு குறிப்பிட்டார்

ad

ad