புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

மைத்திரியிடம் இருந்து கட்சியை பறிக்க தயாராகும் மஹிந்த அணி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட மேற்கொண்டு வரும் முயற்சி தோல்வியடைந்தால், மஹிந்த அணியினர் மாற்று நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவிகளை வகிப்பதை எதிர்த்து வழக்கொன்றை தாக்கல் செய்து தடையுத்தரவு ஒன்றை பெற மஹிந்த கோஷ்டியினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவர் பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்டமை சட்டவிரோதமானது எனக் கூறியே நீதிமன்றத்தின் ஊடாக இந்த தடையுத்தரவை பெற மஹிந்த கோஷ்டி முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்றால், தானாகவே அவருக்கு கட்சியின் தலைவர் பதவி உரித்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் 12-2(4) பந்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக தெரிவான பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி கிடைத்தது.
எனினும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தர்க்கத்தை மஹிந்த கோஷ்டியினர் முன்வைத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாத பட்சத்தில் கட்சியின் மாநாட்டின் மூலம் தலைவர் மற்றும் ஏனைய பதவிகளுக்கான நபர்களை தெரிவு செய்ய வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், கட்சியின் செயலாளராக அனுரபிரிதர்ஷன யாப்பாவையும் பொருளாளராக எஸ்.பி. நாவின்னவையும் தேசிய அமைப்பாளரான சுசில் பிரேமஜயந்தவையும் நியமித்தார்.
அத்துடன் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன் உப தலைவர்களாக ராஜித சேனாரத்ன, எஸ்.பி. திஸாநாயக்க, பியசேன கமகே, எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன, வசந்த சேனாநாயக்க ஆகியோரை கட்சியின் அங்கத்துவத்தில் இருந்தும் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்தார்.

ad

ad