புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மரண தண்டனை இல்லை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி



ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும்
வலு­வி­லுள்ள ஒரே சட்­ட­மான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட்­டுள்­ளமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது. தடுப்புக் காவல் விசா­ரணை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதா­ரண சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். குற்­ற­வா­ளிகள் என அடை­யாளம் காணப்­பட்ட பின்னர் தண்­டனை சாதா­ரண சட்­டத்­தி­லேயே வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினைப் பொறுத்­த­வரை, அந்தச் சட்­டத்தில் மரண தண்­டனை வழங்க முடி­யாது
யங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­து­வதை நான் முற்­று­மு­ழு­தாக வர­வேற்­க­வில்லை. ஏனெனில், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் முற்­று­மு­ழு­தாக அழிக்­கப்­பட வேண்­டிய ஒரு சட்­ட­மாகும். ஆனால், இந்தச் சட்­டத் தின் அடிப்­ப­டையில் விசா­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யினை முன்­வைத்­தது புல­னாய்வுப் பிரி­வி­ன­ரே­யாகும். வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணை­களை 24 மணித்­தி­யா­லத்­திலோ அல்­லது 48 மணித்­தி­யா­லத்­திலோ முடிக்­க­ மு­டி­யாது என்ற கார­ணத்­தினால் அவர்கள் இவ்­வா­றா­ன­தொரு கோரிக்­கை­யினை முன்­வைத்­தி­ருக்­கலாம். அடுத்­த­தாக, ஒன்­பது சந்­தேக நபர்கள் இந்தக் கொலை­யுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் துரி­த­மாக விசா­ர­ணை­களை முடிக்க முடி­யாது என்­ப­தாலும் அவர்கள் இவ்­வா­றா­ன­தொரு பொறி­மு­றை­யினை கையாண்­டி­ருக்­கலாம் என்று வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார்.
அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.
கேள்வி: வித்­தியா கொலை வழக்கு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இது சட்­ட­ரீ­தி­யா­னதா? இது தொடர்பில் உங்கள் அபிப்­பி­ராயம் என்ன?
பதில்: முதலில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் எந்த சூழ்­நி­லையில் நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தென்­பதை நாம் பின்­னோக்கிப் பார்க்க வேண்டும். தந்தை செல்­வாவின் தலை­மையில் தமிழ் மக்­களின் நியா­ய­மான சட்­ட­ரீ­தி­யான உரி­மை­க­ளுக்­காக நடாத்­தப்­பட்ட அகிம்­சை­ வழிப் போராட்­டங்கள் நசுக்­கப்­பட்ட பின்னர் இளை­ஞர்கள் ஆயு­த­மேந்திப் போரா­ட­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டனர்
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தற்­கா­லிகச் சட்­ட­மாக மூன்று வரு­டங்­க­ளுக்கு மட்டும் எனக் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்தச் சட்டம் 1982ஆம் ஆண்டின் 10ஆம் இலக்கச் சட்­டத்­தின்­படி நிரந்­தரச் சட்­ட­மாக்­கப்­பட்­ட­துடன், 2011ஆம் ஆண்டு அவ­ச­ர­கால விதி­களின் முக்­கிய விதிகள் நான்­கையும் இந்தச் சட்­டத்தின் 27ஆம் பிரி­வின்கீழ் உட்­பு­குத்­தப்­பட்டு நிரந்­தரச் சட்­ட­மாக நடை­மு­றையில் உள்­ளது.
அதா­வது, குறிப்­பிட்ட ஒரு நோக்­கத்­துக்­காக இந்தச் சட்டம் கொண்டு­வ­ரப்­பட்­டது. பயங்­க­ர­வாதம் என்றால் என்ன?, இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வது போன்ற வரை­வி­லக்­க­ணங்­க­ளையும் விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக இந்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. 1979 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வரை இந்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்து ஆயு­தங்கள் மௌனிக்­கப்­பட்டு விட்­டன, புலிகள் அழிக்­கப்­பட்­டு­விட்­டனர் என்­றெல்லாம் அர­சாங்கம் கூறி­னா­லும்­கூட, இன்­று­வரை இந்தச் சட்டம் ஒரு நிரந்­தரச் சட்­ட­மாகக் காணப்­ப­டு­கின்­றது.
மேலும், இந்தச் சட்டம் நீக்­கப்­பட வேண்டும். இந்தச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட இளைஞர், யுவ­திகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் என்று நாங் கள் தொடர்ந்தும் வேண்­டுகோள் விடுத்து வரு­கின்றோம். ஆனால், இது­வரை பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட­வில்லை.
இவ்­வா­றான சூழ்­நி­லையில், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் ஒரு சரத்­தான தடுத்து­வைத்து விசா­ரணை செய்தல் என்ற விடயம் வித்­தி­யாவின் கொலை வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ ளது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணையில் பயன்­ப­டுத்­து­வதை நான் முற்­று­மு­ழு­தாக வர­வேற்­க­வில்லை. ஏனெ னில், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் முற்­று­மு­ழு­தாக அழிக்­கப்­பட வேண்டும் என்­பது எங்­க­ளு­டைய நீண்­ட­கால கோரிக்­கை­யாகும்.
இந்தச் சட்­டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் பாது­காப்பு அமைச்­ச­ரினால் வழங்­கப்­படும் தடுப்புக் காவல் உத்­த­ரவைப் பெற்று இந்த வழக்கின் மேல­திக விசா­ர­ணை­களை விசா­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யினை புல­னாய்வுப் பிரி­வினர் முன்­வைத்­தனர்.
வித்­தியா கொலை சந்­தேக நபர்­களை பொதுச் சட்­டத்தின் கீழ் கைது செய்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வந்த பொலிஸார் என்­னென்ன கார­ணங்­க­ளுக்­காக பயங்­க­ர­வாதத் தடைச்சட்­டத்தை நாடி­னார்கள் என்­பதை விரி­வாக பார்ப்­போ­மாயின்,
வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை வெறு­மனே தனி­யான கொலை­யா­கவோ, பாலியல் வன்­பு­ணர்­வா­கவோ மட்டும் நோக்க முடி­யாது. இதன் பின்­ன­ணியில் திட்­ட­மிட்ட செயற்­பா­டுகள் இருக்­கலாம். மேலும், முக்­கிய சந்­தேக நபர்கள் இருக்­கலாம் என்ற சந்­தேகம் வலு­வ­டைந்­துள்­ளது என்­பதை வித்­தியா கொலை செய்­யப்­பட்ட தின­மான 2015 மே மாதம் 13ஆம் திக­தி­யி­லி­ருந்து நடை­பெறும் சம்­ப­வங்­களும், வித்­தியா கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்து படு­கொலை செய்­யப்­பட்ட விதம், இந்த வழக்கின் ஆரம்ப விசா­ர­ணை­களை மேற்­கொண்ட ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸாரின் அலட்­சியப் போக்கு, அதன் பின்­ன­ணியில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியும் இன்னும் சில அதி­கா­ரி­களும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டமை.
அடுத்­த­தாக, இந்த வழக்கின் ஒன்­ப­தா­வது சந்­தே­க­ந­ப­ரான சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் பொது­மக்­களால் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­பவர் தப்பிச் சென்றோ அல்­லது தப்ப விடப்­பட்டோ மறு­தினம் வெள்­ள­வத்­தையில் வைத்து கைது செய்­யப்­பட்­டமை, மேலும் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, அவர் தொடர்பில் கொடி­காமம் பொலிஸ்­நி­லையப் பொறுப்­ப­தி­காரி வழங்­கிய மேல­திக அறிக்­கையும் பலத்த சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தின. அந்த அறிக்­கையில் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ருக்கு சாத­க­மான தன்மை காணப்­பட்­டது. இத­னை­ய­டுத்தே, வித்­தி­யாவின் வழக்கு விசா­ரணை பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­விற்­க­மைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனித படு­கொலை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­விற்கு கைய­ளிக்­கப்­பட்டு அந்­தப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி நிசாந்த டீ சில்வா தலை­மை­யி­லான விசேட பொலிஸ் குழு விசா­ர­ணை­களை நடாத்தி வரு­கி­றது. மேலும், வித்­தி­யாவின் வழக்கு விசா­ர­ணை­களை 24 மணித்­தி­யா­லத்­தி­லேயோ அல்­லது 48 மணித்­தி­யா­லத்­தி­லேயோ முடிக்க முடி­யாது என்ற கார­ணமும் புல­னாய்வுப் பிரி­வினர் இவ்­வா­றா­ன­தொரு கோரிக்­கை­யினை முன்­வைத்­தி­ருக்­கலாம். அடுத்­த­தாக ஒன்­பது சந்­தேக நபர்கள் இந்தக் கொலை­யுடன் தொடர்­பு­பட்­டி­ருப்­பதால் துரி­த­மாக விசா­ர­ணை­களை முடிக்க முடி­யாது என்­ப­தாலும் அவர்கள் இவ்­வா­றா­ன­தொரு பொறி­மு­றை­யினை கையாண்­டி­ருக்­கலாம். மேலும், இந்த வழக்கைப் பொறுத்­த­வரை நேர­டிச்­சான்­றுகள் எதுவும் இல்லை. நேர­டி­யாக துன்­பத்­தையும், துய­ரத்­தையும் அனு­ப­வித்து இறந்த வித்­தி­யா­வுக்­குத்தான் அங்கு உண்­மையில் என்ன நடந்­தது என்­பது தெரியும். இத­ன­டிப்­ப­டையில், நேர­டிச்­சான்று இல்­லா­த­தினால் ஏனைய சான்­று­க­ளுக்குச் செல்ல வேண்டும். ஏனைய சான்­றுகள் என்று எடுத்­துக்­கொண்டால், ஒன்று சூழ்­நிலைச் சான்று. அடுத்­தது அறி­வுசார் சான்­றான அதா­வது, மர­பணுச் சான்­று­களை குறிப்­பி­டலாம்.
குற்­ற­வா­ளி­க­ளுக்கு விரைந்து அதிக பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும், தண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற எதிர்­பார்ப்­புக்­களை நிறைவு செய்யும் நோக்­கத்தில் பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை பாவிப்­பது ஏற்றுக்கொள்ள முடி­யாது என்­பதில் இந்தச் சட்­டதால் பாதிக்­கப்­பட்ட நமது உற­வுகள் நன்­க­றி­வார்கள் ஆனால், எமது நாட்டின் தண்­டனைச் சட்­டத்­திலோ அல்­லது குற்­ற­வியல் கோவை­யிலோ, இவ்­வா­றான கடு­மை­யான குற்­றங்­க­ளுக்­காக போதி­ய­ளவு கால அவ­காசம் எடுத்து தடுத்து வைத்து விசா­ரணை செய்­வ­தற்­கான சட்டம் தற்­போது இல்லை. அவ்­வா­றா­ன­தொரு சட்டம் இருந்­தி­ருக்­கு­மே­யானால், நிச்­ச­ய­மாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தும் சூழ்­நிலை ஏற்­பட்­டி­ருக்­க­மாட்­டா­தெனக் கரு­தலாம்.
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் பலர் 15 தொடக்கம் 20 வரு­டங்­க­ளுக்கு மேலா­கவும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். எது எப்­ப­டியோ, நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது . அந்த வகையில், இந்த விடயம் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்ற நீதி­பதி முன்­னி­லையில் வந்­த­போது, நீதி­மன்றக் காவலில் உள்ள சந்­தேக நபர்கள் பாது­காப்பு அமைச்சின் பணிப்­புரைக்­க­மைய 30 நாட்கள் மாத்­தி­ரமே பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் விசா­ரிக்­கப்­ப­டு­வார்கள் என்று தெளி­வாகக் குறிப்­பிட்­டி­ருந்தார்.
கேள்வி: அவ்­வா­றாயின், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­விட்டு சாதா­ரண சட்­டத்­தின்கீழ் தண்­டனை வழங்க முடி­யுமா?
பதில்: பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் விசா­ர­ணைக்கு மாத்­தி­ரமே பயன்­ப­டுத்­தப்­படும். இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­டங்­களில் தடுத்து வைத்து விசா­ரணை செய்ய இரண்டு சட்­டங்கள் மட்­டுமே உண்டு. ஒன்று போதைப்­பொருள் சட்­டத்தின் பிர­காரம் சந்தேக நபர்­களை ஏழு நாட்­க­ளுக்கு தடுத்து வைத்து விசா­ரிக்க நியா­யா­திக்கம் கொண்ட நீதவான் நீதி­மன்றின் கட்­டளை பெற­மு­டியும். மற்­றை­யது, பயங்­க­ர­வா­தத்­ தடைச்சட்­டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் பாது­காப்பு அமைச்­ச­ரிடம் தடுப்புக் காவல் உத்­த­ர­வினைப் பெற்று சந்­தேக நபர்­களை தடுத்து வைத்து விசா­ரணை நடாத்­த­முடியும். தடுத்து வைத்து விசா­ர­ணை­களை நடாத்த நடை­மு­றையில் வேறு சட்­டங்கள் இல்­லாத கார­ணத்­தினால், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தி­லுள்ள தடுப்­புக்­காவல் உத்­த­ர­வினைப் பெற்­றி­ருக்­கலாம்.
இந்த ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும் வலு­வி­லுள்ள ஒரே சட்­ட­மான பயங்­க­ர­வாத தடைச்சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­டுள்­ளமை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.
தடுப்புக் காவல் விசா­ரணை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதா­ரண சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும். குற்­ற­வா­ளிகள் என அடை­யாளம் காணப்­பட்ட பின்னர் தண்­டனை சாதா­ரண சட்­டத்­தி­லேயே வழங்­கப்­படும். பயங்­க­ர­வாதச் சட்­டத்­தினைப் பொறுத்­த­வரை, அந்தச் சட்­டத்தில் மரண தண்­டனை வழங்க முடி­யாது.
1982ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதி­மன்றில் குட்­டி­மணி-, தங்­கத்­துரை, ஜெகன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக முத­லா­வது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் நடை­பெற்ற வழக்கில் தமிழர் விடு­தலை கூட்­ட­ணியின் தலைவர் மு. சிவ­சி­தம்­பரம், கரி­காலன் என அழைக்­கப்­படும் சட்­டத்­த­ரணி நவ­ரட்ணம், சட்­டத்­த­ரணி உருத்­திர மூர்த்தி ஆகி­யோ­ருடன் நானும் ஆஜ­ரா­கி­யி­ருந்தேன். இந்த வழக்கில் பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்­திற்கு அமை­வாக குற்ற ஒப்­புதல் வாக்­கு­மூலம் பெறப்­பட்­டது. நான்கு மாதங்­களில் வழக்கு விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்னர் நீதி­மன்றம் தீர்ப்­பினை சாதா­ரண சட்­டத்தில் வழங்­கி­யி­ருந்­தது. அதா­வது, இந்த வழக்கைப் பொறுத்­த­வரை சாதா­ரண சட்­டத்தில் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத சட்­டத்தில் வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று சாதா­ரண சட்­டத்தில் தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டன. ஏனெனில், பயங்­க­ர­வாதச் சட்­டத்தில் மர­ண­தண்­டனை வழங்க முடி­யாது. கூட்டு வன்­பு­ணர்வு கொலைக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டும்­போது மரண­தண்­டனை வழங்­கப்­ப­டலாம்.
கேள்வி: வித்­தியா கொலை வழக்கு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இது­போன்ற வழக்­குகள் கடந்த காலங்­களில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­னவா?
பதில்: இதற்கு முன்னர் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவில் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய வாஸ் குண­வர்­தன இம்­தியாஸ் என்ற வர்த்­த­கரை சதி செய்து கொலை செய்­த­தா­கவும், இன்னும் பல மோசடிக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கா­கவும் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. வாஸ் குண­வர்­தன மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் விசா­ரணை இடம்­பெற்­றது. இதே­வேளை, சட்டம் எதைக் கூறி­னாலும் சில சந்­தர்­பப்­பங்­களில் சூழ்­நி­லைக்கு ஏற்ப விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­களில் சட்டம் வளைந்து கொடுக்­க­வேண்­டிய கட்­டாயம் ஏற்­ப­டு­கின்­றது. சட்டம் எதைக் கூறி­னாலும் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். அது இனத்­தையோ, மதத்­தையோ சார்ந்­த­தல்ல. நாம் மனி­தர்கள் என்ற வகையில் நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும். சட்டம் மக்­க­ளுக்­கா­னது. சட்­டத்­துக்­காக மக்கள் என்ற நிலை ஏற்­ப­டக்­கூ­டாது.
கேள்வி: பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமையினால், வித்தியாவின் வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படுமா?
பதில்: சந்­தே­க­நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்டால், அவர் குற்­ற­வா­ளியா? சுற்­ற­வா­ளியா? என்­பதை தீர்­மா­னிப்­பது புலன் விசா­ர­ணையும் சான்­று­க­ளு­மே­யாகும். சான்­றுகள் மிகவும் முக்­கி­ய­மாகும். அந்­த­வ­கையில் ஒரு வழக்­குக்கு சான்­றுகள் மிகவும் முக்­கி­ய­மா­னவை. ஆகவே விசா­ரணை விரை­வாக நடந்து முடிந்த பின்னர் இந்த விசா­ரணைக் கோவை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பப்­படும். பின்னர் சட்­டமா அதிபர் குற்றச்சாட்­டுப்­பத்­தி­ரத்தை மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்த வழக்கின் விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த நீதி நலன்­க­ருதி விசேட நீதி மன்­றமோ அல்­லது மூன்று மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களைக் கொண்ட நீதி ஆயம் (Trial At-–Bar) ஒன்­றினால் விளக்கம் நடாத்­தப்­ப­டலாம்.
வித்­தியா மீதான இந்த கொடூர வல்­லு­றவு மற்றும் படு­கொலைச் சம்­பவம் மக்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் தமி­ழர்கள் மட்­டு­மன்றி, தெற்­கி­லுள்ள ஏனைய இன மக்­களும் பெரும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தனர். இதனால் ஏனைய வழக்­கு­க­ளுடன் வித்­தி­யாவின் கொலை வழக்கை ஒப்­பிட முடி­யாது. இது­வொரு சமூகப் பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. எனவே, இந்த வழக்கு விசா­ர­ணைகள் விரை­வாக இடம்­பெ­ற­வேண்டும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

ad

ad