புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

வெறுப்பில் விருது வாங்க மறுத்த மெஸ்ஸி.. குடும்பத்தினரை தாக்கிய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு


கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் சிலி அணியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோற்று கிண்ணத்தை பறிகொடுத்தது. இதனால் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர்.
இதில் போட்டி நடந்த இடத்தில் மெஸ்ஸியின் சகோதரை கன்னத்தில் ரசிகர்கள் அறைந்து தாக்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மெஸ்ஸியின் குடும்பத்தினர் அரங்கத்தை விட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுவாகவே அர்ஜென்டினா தலைவர் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடும் போது அபாரமாக ஆடுவார் என்றும், தாய்நாட்டுக்காக விளையாடும் போது சொதப்புவார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் வந்து கிண்ணத்தை தவறவிட்டதால், அர்ஜென்டினா ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
உலகக்கிண்ணப் போட்டியிலும் அர்ஜென்டினாவுக்கு இதே நிலைமை தான் ஏற்பட்டது.
ஜேர்மனியிடம் இறுதிப் போட்டியில் கோட்டைவிட்டது. தற்போது கோபா அமெரிக்க தொடரிலும் தோல்விய்டைந்துள்ளதால் விமர்சத்திற்கு உள்ளாகியுள்ளார் மெஸ்ஸி.
இந்த தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருது மெஸ்ஸிக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் வெறுப்பில் அந்த விருதை அவர் வாங்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து பரிசளிப்பு விழாவில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த தொடர்நாயகன் விருது பின்னர் எடுத்து தனியாக கீழே வைக்கப்பட்டது.
இதற்கிடையே இறுதிப் போட்டி முடிந்ததும் அர்ஜென்டினா உடைமாற்றும் அறையில் வீரர்களுக்குள் தகராறு எழுந்ததாகவும் கூறப்படுகிறது.

ad

ad