புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்


கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.மாவட்ட செயலர்
வேதநாயகன்  தெரிவித்தார்.
 
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. தற்போது யாழ்ப்பாணம் மற்றும்  கிளிநொச்சியில் மீள்குடியேற்றம்  இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் வாக்களிப்பு நிலையங்கள் கடந்த காலங்களை விட இம்முறை எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளன. 
 
அதற்கான ஏற்பாடுகளையும்  மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன்  வேட்புமனுத்தாக்கல் ஆரம்பித்துள்ள நிலையில் மாவட்ட செயகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 
அத்துடன்  ஓகஸ்ட் 17 ஆம்  திகதி  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள்  சுமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்முறையும் வாக்குகளை எண்ணும் நிலையமாக யாழ். மத்தியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.  
 
இதேவேளை,  நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தேர்தல் பாதிப்பை ஏற்படுத்தாது.ஏனெனில் பரீட்சை 12 ஆம் திகதியுடன் நிறுத்தப்படுகின்றது. இதனால் வாக்களிப்பு நிலையமாக உள்ள பாடசாலைகள் மற்றும்  வாக்கு எண்ணும்  நிலையங்கள் என்பன ஏற்பாடு செய்யப்படும். 
 
இதற்கான ஏற்பாடுகள்  மாலை நேரத்திலோ அல்லது இரவு வேளையிலேயோ மேற்கொள்ளப்படும். அத்துடன்  தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்று செய்திகள்  தெரிவிக்கின்றனவே தவிர இதுவரை தேர்தல் செயலகத்தினால் எமக்கு எந்தவிதமான அறிவுறுத்தலும்  கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மேலும்  தெரிவித்தார்

ad

ad