புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2015

டியு குணசேகரவின் செயற்பாடு பாரிய அரசியல் மோசடி ஊடகங்களுக்கு வழங்கியது ~கோப்' அறிக்கையல்ல


உபகுழுவின் நகல் இடைக்கால அறிக்கையாகாது
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான ‘கோப்’ குழு அறிக்கை என்னும் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர வெறும் நகலையே ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படாத மேற்படி கோப் உப குழுவின் நகல் செல்லுபடியற்றதெனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் கோப் குழுவின் தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர, நகலொன்றினை கோப் குழுவின் அறிக்கையென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் டியு
குணசேகரவும் தவறான செய்தியை பிரசுரித்த ஊடகங்களும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் 22வது சரத்தினை மீறியிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர், அது குறித்த விரிவான விசாரணைகளை மேற் கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை யொன்றை தான் முன்வைக்க விருப் பதாகவும் கூறினார்.
‘கோப்’ உப குழுவின் நகலானது ‘கோப்’ அறிக்கையாக முடியாத அதேநேரம் கோப் உப குழுவினால் இடைக்கால அறிக்கையொன்றினை சமர்ப்பிக்க முடியாது என்றும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டியு குணசேக்கர அரசியல் நோக்கில் பாரிய மோசடி செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை ‘கோப்’ உப குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிப்பதற்கு பிரதமரென்ற வகையில் தான் தயாராக விருந்தபோதும் பிரதமர் ஒருவர் இதற்கு சமுகமளிக்க வேண்டிய அவசிய மில்லையென டியு குணசேகர ஊடகங் களுக்கு தெரிவித்திருப்பதானது முற்றி லும் தவறானதொரு அபிப்பிராயமா கும். அதனைக் கூறுவதற்கான அதிகாரம் டியு குணசேகரவுக்கு இல்லையென் றும் பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித் தார்.
கோப் உப குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, ரோசி சேனநாயக்க, இரான் விக்கிரமரட்ன ஆகியோரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிறிகொத்தவில் சந்தித்து கலந்துரை யாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மேற்கண்ட வாறு கூறினார்.
கோப் அறிக்கையென்னும் பெயரில் டியு குணசேகர பாரிய அரசியல் மோசடி யில் ஈடுபட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக் கப்பட்ட போதும் புதிய பாராளுமன்றம் கூடி 03 மாத காலத்திற்குள் புதிய கோப் குழு நியமிக்கப்பட்டு, அஜித் நிவார்ட் கப்ரால் ஆளுநராகவிருந்த காலத்தில் மத்திய வங்கியில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் அடுத்தடுத்து வெளிக் கொணரப்படும். மக்களின் பணமான வரி, ஊழியர் சேம இலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையேல் நாம் இப்பதவியிலிருப்பது அர்த்தமற்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முறிகள் விநியோகம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவர எதிர்க் கட்சியினர் தயாரான போது இது குறித்து விரிவாக ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக் குமாறு சபாநாயகர் கோப் குழுவிற்கு பணித்திருந்தார். இதற்காக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கோப் உப குழுவினால் இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் குறித்த காலத்திற்குள் எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாததுடன் அதற்காக மேலும் காலநீடிப்பு கோரப் பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 26 ஆம் திகதி பாராளுமன்றம் கலைப் படுவதனால் அதற்கு முதல் தினமான வியாழக்கிழமை கோப் குழுவின் தலைவராகவிருந்த டியு குணசேக்கரவினால் உப குழு உறுப்பினர்களின் கலந்தா லோசிப்பின்றி நகலொன்று தயாரிக்கப் பட்டிருந்தது.
இந்த நகல் கோப் குழுவிடமோ பாராளுமன்றத்திலோ முன்வைக்கப் படவில்லை. எனவே இது எந்த வகை யிலும் கோப் அறிக்கையாகவோ அல்லது கோப் இடைக்கால அறிக்கையாகவோ முடியாது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் கோப் குழு தலைவர் பதவியிலிருந்து இயல்பாகவே நீக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டியு குணசேகர தொடர்ந்தும் கோப் குழு தலைவரென்ற வகையில் ஊடகங்களுக்கு நகலொன்றினை அறிக்கையாக வெளி யிட்டிருப்பது பாராளுமன்ற சிறப்புரிமை களின் 22வது சரத்தினை மீறும் செயலாகும்.
அதேபோன்று, ஊடகங்களும் பாராளுமன்றம் தொடர்பிலான தவறான செய்தியினை வெளியிட்டிருப்பதன் மூலம் இதே சிறப்புரிமையை மீறியுள்ளன.
குறித்த நகல் கொண்டுவரப்பட்ட போது உப குழு உறுப்பினர்கள் பலருக்கும் கூட்டத்திற்கு சமுகமளிக்க முடியாத நிலை உருவானது. இக்கூட்டம் திடீரென கூட்டப்பட்டிருந்ததால் பல முன்னாள் எம்.பிக்கள் தத்தமது மாவட்ட செயற்பாடுகளிலும் பலர் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீல. சு. க. கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர். இருப்பினும் அவசர நகல் குறித்து தெரியவந்ததும் 24 மணித்தியாலங்களுக்குள்ளாக அதற்கான தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
டியு குணசேகர இவ்வாறு தெரிவித் திருப்பதும் ஊடகங்கள் மூலம் அதற்கு பிரசாரம் பெற்றுக்கொடுப்பதனூடாக இரு தரப்பினரும் பாராளுமன்ற கூட்டத்தில் அதிகாரம் மற்றும் சிறப்புரிமையை மிக மோசமாக மீறியுள்ளனர்.
பாராளுமன்ற குழுவொன்றின் அறிக்கை பாராளு மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பாராளுமன்ற குழுவின் அறிக்கை தொடர் பாக தவறாக வழிநடத்தக் கூடியவிதத்தில் அறிக்கையிடுதல் குற்றமாகுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்க மளித்தார்.
கடந்த அரசாங்கத்தினால் மக்களின் ஊழி யர் சேம இலாப நிதி, ஊழியர் நம் பிக்கை நிதியமென்பன தவறாக பயன் படுத்தப்பட்டன. இதனால் மக்கள் அதற்குரிய வட்டியை பெறமுடியாமல் போனது. நாட்டு மக்கள் இவ்வாறு ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காகவே நான் “ஏல’ முறைமையை கையாண்டேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய டியு குணசேகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுடன் தொலைக்காட்சியில் நேரக்கு நேர் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தான் அழைப்பதாகவும் பிரதமர் கூறினார்.
பிரித்தானியாவில் நியுஸ் கோப் விசாரணைகளில் அந்நாட்டின் பிரதமரே நேரில் சென்று வாக்குமூலம் அளித்திருந்தார். இதுவே திருத்தமான முறையாகும். அவ்வாறானதொரு விசாரணை முறையினையே நானும் விரும்புகிறேன். நான் கோப் விசாரணைகளுக்கு சமுகமளிக்க காத்திருக்கையில், பிரதமர் அதற்குச் சமுகமளிப்பதில்லையென டியு குணசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது நியாயமற்றது என்றும் பிரதமர் கூறினார்.
இக்கலந்துரையாடலில் பிரதமரிடம் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான டியு குணசேகரவை வயது முதிர்ந்த அனுபவசாலியென நாம் கருதியிருந்த போதும் அவர் ஒரு சதத்திற்கும் பிரயோசனமில்லாத கொந்தராத்து வேலையிலேயே ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கூட்டம் கூடுவதற்கு நேரம் ஒதுக்கி தந்துவிட்டு எமக்கே தெரியாமல் எமது வீடுகளுக்கு இரவோடு இரவாக இந்த நகலை இவர் விநியோகம் செய்ததிலிருந்து இச் செயற்பாடுகளின் பின்னணியில் அரசியல் இருப்பது எமக்கு புலனாகிறது.
எத்தனையோ தடவை எதிர்க் கட்சி தரப்பிலிருந்து இதனை நீங்கள் பார்க்க கூடாது என நானே அவரிடம் கூறியிருக் கிறேன். இவருக்குகெதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என பிரதமரிடம் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க, பாராளுமன்றம் கலைப்பதற்கு முதல்நாள் நள்ளிரவு 11 மணிக்கு இந்த நகல் எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது நிச்சய மாக யாரோ ஒரு அரசியல்வாதியின் அலுவலகம் அல்லது வீட்டில் வைத்தே தயாரிக்கப் பட்டிருக்க வேண்டுமென்று கூறினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரட்ன கோப் உபகுழுவின் நகலை அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அன்றைய தினம் முன்னாள் எம்.பிக்களான சுனில் ஹந்துநெத்தி அர்ஜுன ரணதுங்க. ராஜித சேனாரத்ன, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கூட்டத்திற்கு சமுகமளித்திருக்கவில்லையெனவும் தெரிவித்தார்.

ad

ad