புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

ஐக்கிய தேசிய கட்சி 118 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்கள். புலனாய்பு பிரிவின் அறிக்கை


நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் பெற்றுக்கொள்ளும் ஆசனங்கள் தொடர்பில்தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ் அறிக்கையில் இதுவரை தேர்தலில் காணப்பட்ட போட்டித்தன்மை நீங்கிக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அறிக்கைக்கமை ஐக்கிய தேசிய கட்சி 118 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 80 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 ஆசனங்களை கடக்கும் சூழ்நிலை இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசியல் அரங்கில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்களுக்கமைய பெற்றுக்கொள்ளும் ஆசனங்களின் வீதத்தில் சிறு சிறு மாற்றங்களே ஏற்படும் என நம்பத்தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இதற்கு முன்னர் வெளியாகிய அறிக்கைக்கமைய ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களையும், முன்னணி 90 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 12 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என கூறப்பட்டது.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தல் மேடைகளில் தாங்கள் இம்முறை 117 ஆசனங்களை பெற்றுக்கொள்வதாக குறிப்பிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad