புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

அச்சுறுத்தலாம், மிரட்டலாம் என ஜெ. அரசு தப்புக் கணக்குப் போடுகிறது: விஜயகாந்த் கைதுக்கு வைகோ கண்டனம்



மது ஒழிப்பு மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, விஜயகாந்த் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டை நாசமாக்கி வருகின்ற மது போதையின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வீரத் தியாகி சசிபெருமாள் அறப்போர் நடத்தியபோது, அ.தி.மு.க. அரசின் அராஜகத்தால் சாகடிக்கப்பட்டார். அவரது உடல் நாளை அடக்கம் செய்யப்பட இருக்கிறது. மதுவை எதிர்த்து மக்கள் சக்தியை அறவழியில் திரட்ட, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆயிரக்கணக்கான தோழர்களுடன் மனிதச் சங்கிலி அமைத்து நிற்க முயன்றபோது, அதனைத் தடுத்து ஜெயலலிதா அரசின் காவல்துறை அவரைக் கைது செய்தது அராஜக நடவடிக்கை ஆகும்.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையின் குறுக்கே நிற்காமல், சாலை ஓரத்தில் வரிசையாக நிற்பது ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை ஆகும். அண்ணா தி.மு.க. அரசு ஜனநாயக உரிமைகளைக் காலில்போட்டு மிதிக்கிறது என்பதற்கு சாட்சியம்தான் இந்தக் கைது நடவடிக்கை. 

மதுவை எதிர்த்துப் போராடுகிறவர்களை அடக்குமுறையின் மூலம் அச்சுறுத்தலாம், மிரட்டலாம் என்று ஜெயலலிதா அரசு தப்புக் கணக்குப் போடுகிறது.

மிகப்பெரிய சர்வாதிகாரிகளின் கொட்டம் எல்லாம் மூண்டு எழும் மக்கள் சக்தியால் தகர்ந்து தரைமட்டாகி உள்ளது என்பதைச் சரித்திரம் நிரூபித்துள்ளது. ஜெயலலிதா அரசின் காவல்துறை அடக்குமுறையைத் துச்சமாகக் கருதி தாய்மார்களும், இளைஞர்களும், மாணவச் செல்வங்களும் ஆவேசத்துடன் கிளர்ந்து எழுந்து தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க அறவழியில் போராட வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்

ad

ad