புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை!



ஆந்திரா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலம்,  ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசாகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர அரசின் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச்
சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

இதனையடுத்து ஆந்திர மாநில முதலமைச்சருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டு, அக்கடிதத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலரும் இறந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும், அவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என்றும், அதிரடிபடையினரின் நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாடுடன்தான் நடந்ததா என்று சந்தேகம் எழும்புவதால் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடவேண்டும் என்றும் அதன்பேரில் உண்மை நிலை அறியப்பட்டு மனித உரிமை மீறல் குற்றம் நடந்திருந்தால் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் அளிக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய குழு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் திருப்பதிக்கு அனுப்பப்பட்டது.  இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அமரர் ஊர்திகள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தமிழகத்திற்கு திரும்ப கொண்டு வருவதற்காக சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை திருப்பதி அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக திருப்பதியில் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக காவல்துறை தலைவர் மஞ்சுநாதா தலைமையில் காவலர் குழு ஒன்று திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகளாக இருப்பதாலும், அவர்களது ஏழ்மை மற்றும் துயர நிலை கருதியும், அவர்களது குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா, இம்மனுதாரர்களது கோரிக்கையினை பரிவுடனும், கருணையுடனும் ஏற்று மனுதாரர்களின் தகுதிக்கேற்ப 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சமையல் உதவியாளர் பணியும், 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சத்துணவு ஒருங்கிணைப்பாளர் பணியும் மற்றும் ஒருவரது வாரிசுதாரருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணியும் வழங்கிட ஆணையிட்டார்.

அதன் அடிப்படையில் மேற்கண்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5 நபர்களுக்கு அவர்களுக்கான பணி முதலமைச்சரிடம் இருந்து பணிநியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், தங்களது ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கருணையுடன் பணி நியமன ஆணைகளை வழங்கியமைக்காக முதலமைச்சருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்" என்று கூறப்பட்டுள்ள
து

ad

ad