புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

அதிகார மோகத்தினால் பொய்யான தகவல்களை பரப்பும் விஷமிகளை விரட்டுவோம்: சந்திரிகா


அதிகார மோகத்தினாலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பியும் சமூகத்தில் விஷம் கலக்கின்ற சக்திகளைத் தோற்கடித்தல் நாட்டின் எதிர்காலத்துக்கு
 இன்றியமையாததாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க,
 
 புதிய தேசமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கும் நோக்கத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ளும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்' எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கட்சியைப் பாதுகாக்க வேண்டுமாயின், முதலில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதாகவும் ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக் கொண்ட வெற்றியை பாதுகாப்பது மிக முக்கியமான விடயமாகும் எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இதன்பிரகாரம், ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காகப் பங்காற்றிய அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து, அனைத்து தரப்புகளினதும் பங்களிப்புடன் வேறுபாடுகளைப் புறந்தள்ளி பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அர்பணிப்பு செய்துள்ள சக்திகள் மற்றும் தலைமைத்துவங்களுடன் ஒன்றிணையுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து ஆதரவாளர்களிடமும் சந்திரிகா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நல்லாட்சி அரசாங்க மொன்றை உருவாக்குவதற்காக ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியை முன்நோக்கிக் கொண்டு செல்லக்கூடிய பண்பாடுள்ள மக்கள் பிரதிநிகளை மாத்திரம் தெரிவு செய்வதற்கும் நாடாளுமன்றத்தை மக்களின் கௌரவமான அபிலாஷைகளை நிறைவேற்றுகின்ற ஒரு நிறுவனமாக கட்டியெழுப்புவதற்கும் தேர்தலின்போது அனைத்து
 
பிர​ஜைகளினதும் வாக்குகளை புத்திசாதூரியத்துடன் பயன்படுத்த வேண்டும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad