புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

ஒரு கனதியான முகநூல் பதிவு நன்றி

Suthan Nada தயவு செய்து எந்தவொரு அரசியல்வாதியும் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டம் பற்றியும் கதைக்க வேண்டாம். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு கதையையும் வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கை அரசுடன் கேள்வி கேட்கும் போது இலங்கை அரசினால்
கொடுக்கப் படும் பதில் பேச்சு சுதந்திரம் இல்லாமலா இவ்வாறெல்லாம் கதைக்கிறார்கள் என்று. சம்மந்தன் தொடங்கி, ஸ்ரீதரன், சைக்கிள்காரன் வரை பேசும் வீண் பேச்சுக்களை இலங்கை அரசு போட்டு காட்டுகிறார்கள்.

சுதந்திர நடமாட்டம் இல்லையெனில் இவ்வாறு சுதந்திரமாக பேசும் இவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என அவர்கள் ஊடகங்களை திருப்பி கேள்வி கேட்பதோடு அவர்கள் இவ்வாறு பேசும் காணொலிகளை ஆதாரமாகவும் கொடுக்கிறார்கள். தயவு செய்து இலங்கை அரசின் பாராளுமன்றம் போவதற்காக தமிழருக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லும் இலங்கை அரசுக்கு சாட்சியாகளாக இருக்க வேண்டாம்.

நீங்கள் புத்தி ஜீவிகளாகவோ, கோடிஸ்வரர்களாகவோ இருங்கள் ஆனால் போராடில் பிரபாகரன் போல் தனிய நின்று போராடுங்கள். தற்போதய தேர்தலில் நீங்கள் நிற்பதே இலங்கை அரசின் சட்டத்துக்கு கீழ் இணக்க அரசியல் செய்யும் ஆவலில் தான். உங்களின் உணர்ச்சிகரமான வெட்டிப் பேச்சால் உரிமைகள் கிடைப்பதையும் தடுத்து கொண்டிருக்கிறீர்கள்.

உதாரணத்துக்கு, கடந்த வட மாகாண சபை தேர்தல் முடியும் தருணத்தில் மகிந்தா அமெரிக்காவில் நின்றார். அச்சமயம் பத்திரிகையாளர்கள் தமிழர் பிரச்சனை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். அதற்கு மகிந்த நிதானமாக பதில் சொல்கிறார். வட மாகாண தேர்தல் முடிவடைந்துள்ளது. தமிழர்கள் தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. தலைவராக வந்த விக்னேஸ்வரன்,பிரபாகரன் மாவீரன் எனவும், அவரை சார்ந்தது தான் தங்கள் கட்சி என்றும், மாவீரர் துயிலும் இல்லம் கட்டப் போவதாகவும் பிரச்சாரம் செய்து வெற்றியீட்டியுள்ளார்.

இப்படி இருக்கையில் இவர்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இல்லையெனவும், தமிழருக்கு பிரச்சனையெனவும் எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும் என மகிந்த இலங்கையில் தமிழருக்கு பிரச்சனை இல்லையென்றவாறு பத்திரிகையாளர் சந்திப்பை வெற்றிகரமாக முடித்து கொண்டார்.

இவ்வாறான பிரச்சாரங்களால் எம்மினத்துக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை தீர்வும் கிடைக்க போவதில்லை. ஆதலால் பாராளுமன்றம் போவதற்காக சிங்களவர்கள் தமிழருக்கு பிரச்சனை இல்லையென கூறும் கூற்றுக்கு நீங்கள் சாட்சியகாளாக இருக்காதீர்கள்.

-நடா -

ad

ad