லிபியாவிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பியாவிற்கு பிழைப்பு தேடி 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்திய தரைக்கடல்
பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 400 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், இத்தாலி, மால்டா நாடுகளின் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியுள்ளனர்.