புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

ட்டு மாவட்ட தேர்தல் முடிவு வெளீயிடுவதில் தாமதம்!உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும், ஐ.தே.கட்சி 1 ஆசனத்தையும் , முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்

மட்டு மாவட்ட தேர்தல் முடிவு வெளீயிடுவதில் தாமதம்! காரணம் என்ன?
அனைத்து மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள்  வெளிவந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் இதுவரையில் வெளியாகவில்லை.
வட கிழக்கின் அனைத்து மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளிவந்த போதிலும் மட்டு மாவட்டத்தின் முடிவுகள் மட்டும் தாமதமாகி இருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இது தொடர்பில்  பெயர் குறிப்பிட விரும்பாத மட்டு மாவட்டத்தின் தேர்தல் செயலக அதிகாரி தெரிவிக்கையில்,

ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றிற்கிடையே ஏற்பட்ட போட்டி நிலைமையால், மீளவும் வாக்குகள் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியிட தாமதமாகியுள்ளன எனவும் ஆனால் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி வாக்குகள் மீள் எண்ணப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஐ.ம.சு. முன்னணி முதன்மை வேட்பாளர் எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் கோரிக்கையின் அடிப்படையிலேயே மீளவும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் உத்தியோகப்பற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும்,  ஐ.தே.கட்சி 1 ஆசனத்தையும் , சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ad

ad