புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

18 வயது வீராங்கனையிடம் செரீனா அதிர்ச்சித் தோல்வி

ரோஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் சுவிட் சர்லாந்தைச் சேர்ந்த 18 வயதேயான இளம் வீராங்கனை பெலிண்டா
பென்சிக்கிடம் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற் றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதியிலேயே அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இளம் வீராங்களை பென்சிக்கை எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 6-3 என எளிதில் வென்ற நிலையில், 2ஆவது செட்டை பென்டிக் கடும் போராட்டத்திற்குப்பின் 7-5 என கைப்பற்றினார்.
இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், பென்சிக் 6-4 என எளிதில் கைப்பற்றி செரீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கு முன் னோட்டமான இந்தப் போட்டியில் தோல்வியடைந் தது செரீனாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியிருக்கிறது. ரோஜர்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் பென்சிக், சிமோனா ஹாலேப் உடன் மோதுகிறார்.

ad

ad