புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2015

இலங்கை பாராளுமன்றத் தேர்தல், பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டது! ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார்

இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார் என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால் அதனை தனது டுவிட்டர் செய்தியில் ராஜபக்சே மறுத்து உள்ளார்.
மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. பின்னர் ஒட்டுப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் உடனே எண்ணப்பட்டு, 2 கட்டங்களாக முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஓட்டுப்பெட்டிகள் பிரித்து வாக்குகள் எண்ணப்படுகிறது. 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகவும், மீதமுள்ள 29 உறுப்பினர்கள் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த கூட்டணி சார்பில்தான் ராஜபக்சே போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணிக்கும் இடையே புள்ளி அளவிலான வேறுபாடு நீடிக்கிறது. ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி 43.8 சதவீத வாக்குகளையும், ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணி 43.5 சதவீத வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 5.4 சதவீத வாக்குகளையும் பெற்று உள்ளது. ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொண்டார் என ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.  பிரதமர் கனவு தகர்க்கப்பட்டு விட்டது ”நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். ஒரு நல்ல போட்டியில் நாங்கள் தோற்றுவிட்டோம்” ஆனாலும், பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக பணியாற்றுவேன் என்று ராஜபக்சே கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிவு தொடர்பாக அதிகாரப்பூர்வமான முடிவு வெளியிடப்படாத நிலையில் ராஜபக்சே இதனை கூறிஉள்ளார். இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் எந்தஒரு கட்சிக்கும் 113 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையே உள்ளது என்று கூறப்படுகிறது.
ராஜபக்சே தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதாகவும், பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்படவுள்ளதாகவும் ஏ.எஃப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் ராஜபக்சே இதனை மறுத்து உள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ள ராஜபக்சே, இறுதியான அதிகாரபூர்வ முடிவை இன்னமும் பெறாத நிலையில் தனது தோல்வியையோ அல்லது வெற்றியையோ ஒப்புக்கொள்ள தன்னால் முடியாது. என்று குறிப்பிட்டு உள்ளார்.

ad

ad