புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

ஒக்டோபர் மாதத்துடன் 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு

இரண்டு உள்ளூராட்சி மன்றங்களைத் தவிர 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம்
குறிப்பிட்டுள்ளது.புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இந்த 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கலப்பு முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் பொருட்டு உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளதுடன், அந்த நடவடிக்கைகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயங்களை வர்த்தமான மூலம் பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad