புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா!

Sivasakthy Ananthan இன் புகைப்படம்.

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம்பெற இருக்கின்றது.

யாழ். பல்கலைக்கழக நுண்கலைத்துறை, சிலோன் தியேட்டர்ஸ் மற்றும் அஜன்டா – 14 என்பவற்றோடு இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளன.
உலகத் திரைப்படங்களினூடாக ஒவ்வொரு நாடுகளின் கலாச்சாரம், பண்பாடுகளை, அந்த மக்களின் வாழ்வியலை, வரலாறுகளை எம் யாழ்ப்பாணத்து மக்களும் அறிந்து கொள்வதற்கு அரிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு 04.09.2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் உள்ள Majestic Cineplex இன் Bronze Cinema திரையரங்கில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் செய்தியாளர்கள், விரிவுரையாளர்கள், திரைப்பட, குறுந்திரைப்பட இயக்குனர்கள், மாணவர்கள், சினிமா ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.
விழா இயக்குனரான அனோமா ராஜகருணா அவர்கள் விழா தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் சுயாதீனமாக திரைப்படங்களினைக் கொண்டாடுவதே எங்களின் அடிப்படையான நோக்கமாகும். இவ்விழாவானது 30 வருடகால ஆயுத முரண்பாடு மற்றும் போரின் அழிவுகளில் இருந்து மீண்டெழுதலாக அமைவதோடு, கலையை பயன்படுத்தலானது, மக்களைச் சென்றடைதலாகும் என நாங்கள் நம்புகின்றோம். சினிமாவினூடாக சமூகங்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து ஒருவர் மற்றவருடன் இடைவினை புரிவதற்கான ஓர் இடைவெளியினை உருவாக்கும் எனவும் நாம் எண்ணுகின்றோம். என்றார்.
இத்திரைப்பட விழாவில் 20 நாடுகள் பங்குபற்றுவதோடு, விருதினை வென்ற, விமர்சனபூர்வமாகப் பாராட்டப்பட்ட 22 ஐரோப்பிய திரைப்படங்களினையும் காட்சிப்படுத்துவதற்கு யாழ். சர்வதேச திரைப்பட விழாவுடன், இலங்கையின் ஐரோப்பிய திரைப்பட விழாவும் இணைந்து கொள்கின்றது.
மூத்தோரைக் கௌரவித்தல் மற்றும் இளம் தலைமுறையினை ஊக்குவித்தல் என்கிற வகையில் யாழ் சர்வதேச திரைப்பட விழாவானது மூன்று விருதுகளினை அதனது முதலாவது வெளியீட்டில் வழங்க உள்ளது.
வாழ்நாள் சாதனை விருது யாழ்ப்பாணத்தின் மூத்த திரைப்பட விமர்சகரான அ.ஜேசுராசா அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இலங்கை தவிர ஏனைய நாடுகளில் இருந்து காட்சிப்படுத்தப்படும் 12 அறிமுகத் திரைப்படங்கள் அறிமுக திறனாய்வு விருதுக்காக போட்டியிடுகின்றன.
யாழில் திரைப்பட விழாவுக்கு வந்து பார்வையிடும் பார்வையாளர்கள் சிறந்த குறும்படங்களை வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். அது மிகச் சிறந்த குறும்படத்துக்கான பார்வையாளர் விருதாக வழங்கப்படும்.
உலகத் திரைப்படங்களை யாழ் மண்ணில் பார்வையிட இலங்கை மற்றும் சர்வதேச திரைப்பட ஆர்வலர்களை விழாவுக்கு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.
செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் (Prasanna Vithanage) ”பிறகு” ”with you without you” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. அதில் இயக்குனர் பிரசன்ன விதானகேயும் நேரடியாக பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad