புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு: பாரிக்கர்



முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்துவது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இந்த திட்டத்தை அமல்படுத்த 42 ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர், திட்டத்தை செயல்படுத்த ரூ.8ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடிவரைசெலவாகும் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும், நிலுவைத் தொகையை வழங்குவதற்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவாகும், நிலுவைத் தொகையை ஆறுமாதத்துக்கு ஒரு முறை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு நபர் குழு அமைக்கப்படும் என்றார்.

மேலும் 2014 ஜூலை 1 முதல் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்,  2013-ம் ஆண்டை அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், விருப்ப ஓய்வுபெறுவோருக்கு ஒரு பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் பொருந்தாது, உயிரழந்த 6 லட்சம் வீரர்களின் குடும்பங்கள் உள்பட 30 லட்சம் பேர் பயனடைவர் என்றும் தெரிவத்தார். 

ad

ad