புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

விருப்பு வாக்கு பிரச்சினை: ராஜபக்ச தரப்பில் மோதல்


கடந்த பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மஹிந்த தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு விருப்பு வாக்கு முடிவுகளில் குறைவு காணப்படுவதனால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மற்றும் தெரிவாகாத உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.
கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களை பெற்றுகொண்டுள்ள நிலையில் குறித்த 7 பேரும் மஹிந்த ராஜபக்ச தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகும்.
அத் தரப்பினை பிரதிநிதித்துவப் படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜகத் குமார, பொதுத் தேர்தலின் விருப்பு வாக்குகளை மீள எண்ண வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விருப்பு வாக்குகளுக்கமை ஜகத் குமாரவுக்கு 09 ஆம் இடம் கிடைத்துள்ள நிலையில் முதலில் வெளியிட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை மற்றும் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கான பட்டியலுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி தேர்தல் முடிவுகள் எங்களுக்கு 19ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கே எங்களுக்கு வழங்கினார்கள். அந்த சந்தர்ப்பத்தில் நான் 29702 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தேன்.
எனினும் கடந்த 31ஆம் திகதி இரண்டு வாரங்களுக்கு பின் வெளியாகிய முடிவுகளுக்கமை நான் 30402 விருப்புகளை பெற்றிருந்தேன் என தெரிந்துகொண்டேன். 700 விருப்புகள் அதிகமாக பெற்றிருந்தேன்.
எனவே அதன் காரணமாக தெளிவாகியுள்ளது. நாங்கள் சந்தேகித்ததனை போன்று விருப்பு வாக்குகளை எண்ணும் போது ஏதோ ஒரு சில தவறுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

ad

ad