புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

ஹங்கேரியிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஜேர்மன், ஒஸ்ட்ரிய எல்லையூடாக பயணிக்க அனுமதி

ஹங்கேரியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக கோரிக்கையாளர்களை தமது எல்லையூடாக பயணிப்பதற்கு ஜேர்மன் மற்றும் ஒஸ்ட்ரிய
நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
சுமார் 1000 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒஸ்ட்ரிய எல்லையை நோக்கி நடைபயணமாக செல்வதற்கு ஆரம்பித்ததை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஒஸ்ட்ரிய அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அகதிகளை எல்லைப்பகுதிக்கு அழைத்து வருவதற்காக பஸ் வண்டிகளும் அனுப்பட்டுள்ளன.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக எல்லைப்பகுதியில் பொலிஸாரும் செஞ்சிலுவை சங்க ஊழியர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஒஸ்ட்ரியாவில் தஞ்சமடைவதற்காக விண்ணபிக்க முடியும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 3 வயது சிறுவனின் குடும்பத்திற்கு தமது நாட்டில் தஞ்சம் வழங்குவதற்கான அனுசரணையை வழங்குவதாக கனடா டொரன்டோவின் மேயரான ஜோன் டொரி தெரிவித்துள்ளார்.

ad

ad