புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

நாட்டில் ஜனநாயகம் மலர்ந்தாலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு இதுவரையிலும் இல்லை : அமெரிக்க பிரதிநிதிகளிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு

நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும்
நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு நேற்று அமெரிக்க மேல் மாகாண செனட் சபையில் இருந்து 6 பேர் கொண்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.அந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில்,
ஜனவரி,  ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரான மாற்றத்தினை எவ்வாறு எதிர்பார்க்கின்றீர்கள் என அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், மாற்றம் ஏற்பட்டமை நல்ல விடயம். தேர்தல் நல்லமுறையில் நடைபெற்றிருந்தாலும், வருங்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பது பற்றி எமக்கு தெரியாது. ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் தமிழ் மக்களை பொறுத்தவரையில் நன்மையாக அமையவில்லை.நாட்டினை முழுமையாக பார்த்தால் ஜனநாயக ரீதியில் நன்மையை தந்துள்ளது. தனிப்பட்ட வகையில், தமிழ் மக்களின் நலனுக்காக பார்த்தால் நன்மை தந்தாக தெரியவில்லை.

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தினை வெளியேற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. இராணுவம் யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அதேநேரம் 64 ஆயிரம் ஏக்கர் காணியில் 1000 ஏக்கரை மட்டுமே மக்களுக்கு விடுவித்துள்ளனர்.அந்த காணிகளில் மக்கள் குடியமர முடியாது. எனவே, எவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்க்க முடியுமென அவர் தெரிவித்தார்.

மாகாண அரசின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசின் உள்ளீடுகள் அதிகமாக காணப்படுகின்ற அதேவேளை, இராணுவத்தின் செயற்பாடுகளை வெளியில் குறைத்துக் கொண்டாலும், சில செயற்பாடுகளை மறைமுகமாக செய்கின்றார்கள். முன்னர் எடுத்த காணிகளை விட்டும், மீண்டும் தமக்கான முகாம்களை அமைப்பதற்கு காணிகளை கேட்டு எம்மிடம் வருகின்றார்கள். அந்த காணிகளை கொடுக்க மறுத்துவிட்டால், காணி ஆணையாளரின் அனுமதியினை பெற்றுக்கொண்டு அந்த காணிகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.இவை அனைத்துச் செயற்பாடுகளும் எமக்கு நன்மை தரும் என்று தெரியவில்லை. அரசாங்கம் யாராக இருந்தாலும், தமிழ், சிங்களம் என்ற இனப்பாகுபாடு பிரதிபலிக்கின்றதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்ளக விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களா? என செனட் உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு முதலமைச்சர் ஆம், உள்ளக விசாரணையினை நாங்கள் எதிர்ப்பதுடன் சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டுமென அமெரிக்க மேல் செனட்சபை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad