புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2015

பெண் பிள்ளைகள் உள்ள யாழ்ப்பாணத்து அப்பாக்களுக்கு வங்கிக் கணக்கை மீளாய்வு செய்யுங்கள்

தனது தந்தையின் ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 3 லட்சம் ரூபாக்களுக்கு மேல் காசுகளை எடுத்து தனது காதலனுக்கு கொடுத்துள்ளாள்
16 வயதான பிரபல பாடசாலை மாணவி. யாழ் கோண்டாவில் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் என தெரியவருகின்றது.
தனது ஏ.ரி.எம் அட்டையில் இருந்து பணம் எடுக்கும் போது எஸ்.எம்.எஸ் அலேட் வருமாறு செய்திருந்த தந்தையின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் புத்திசாலித்தனமாக முறியடித்துள்ளார் குறித்த மாணவி.
தந்தை கொழும்பில் இருந்து வந்தவுடன் களைப்பாகப் படுத்திருக்கும் வேளையில் தந்தையிடம் இருந்து ஏ.ரி.எம் அட்டையைத் திருடி அத்துடன் தந்தையின் கைத்தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஏ.ரி.எம் இல் காசை எடுத்து வந்துள்ளார்.
ஒரே தடவையில் ஒரு லட்சம் வரை எடுத்ததாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னர் தொலைபேசிக்கு வந்த எஸ்.எம்.எஸ் தகவல்களையும் அதிலிருந்து அழித்துவிட்டு கில்லாடி வேலை செய்துள்ளார் குறித்த மாணவி.
தனது காதலனான 17 வயது பிரபல பாடசாலை மாணவனுக்கே இந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய அந்த மாணவன் ஒரு ஐ.போன் 6 மற்றும் மடிக்கணனி போன்றவற்றை வாங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த வாரம் கணக்கை சரி பார்த்த தந்தையார் தனது கணக்கில் இருந்து குறிப்பிட்டளவு பணம் குறைவடைவதையும் அவதானித்து அது தொடர்பாக வங்கியில் விசாரித்த போது வங்கி அதிகாரிகள் அப் பணம் எப்போது எடுக்கப்பட்டது, எந்த ஏ.ரி.எம் இல் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் கூறியுள்ளனர், உடனடியாக தனது கில்லாடி மகள் மீது சந்தேகப்பட்ட தந்தை அவளை விசாரித்த போதே குட்டுகள் அம்பலமாகியுள்ளது,
இதனையடுத்து குறித்த மாணவனை அழைத்து விசாரித்த பின்னர் உண்மைகள் வெளிவந்ததால் மாணவனின் தந்தை கொடுத்த உத்தரவாதத்தின் பின்னர் பொலிசாரிடம் முறையிடாது தந்தை விட்டுள்ளதாக தெரியவருகின்றது, மாணவனின் தந்தையும் அரசாங்க அதிகாரி எனவும் தெரியவருகின்றது

ad

ad