புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

முள்ளி வாய்க்காலில் குறுகிய நாட்களில் லட்சம் பேரை கொன்று குவித்த போது,தெருத்தெருவாய் மக்கள் கடும் குளிரிலும் மழையிலும்
கைக்குழந்தைகளோடு தமது வேலைகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு தமது உறவுகளின் உயிர்களுக்காகவும் அங்கு செத்து மடியும் அப்பாவி மக்களுக்காகவும் தெருதெருவாய் நியாயம் கேட்டு கதறி அழுதபோது,
வெறும் பசப்பு வார்த்தைகளையும் அறிக்கைகளையும் கூறிவிட்டு, ஆயுதங்களையும் விற்று தள்ளினார்கள்.
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த மக்களை தண்ணீர் பாய்ச்சி கலைத்தார்கள்.இரகசியமாக உணவுசாப்பிட்டு உண்ணா விரதம் இருந்ததாக கூறி அகிம்சை வழி போராட்டத்தை கறை படியச் செய்தார்கள்.அதற்கு எதிராக வழக்குப் போட்டு உணவிரமிருந்த பரமேஸ்வரன் என்ற தமிழ் இன ஆதரவாளர் 4000 பவுன்சுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
80,000விதவைகள்,அனாதைகள்அங்கவீனர்கள்,பாலியல் துஸ்பிரயோகம்,யுத்தமீறல்கள்,லட்ச கணக்கில் அகதிகள்,மனநோயாளிகள், குறிப்பாக பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொன்று குவித்தார்கள்.
இவைகள் எல்லாம் கி.பி.300 ஆம் ஆண்டு நடைபெறவில்லை.இதே நவீன காலத்தில் இதே கணணி யுகத்தில் சட்லைடுகள் பார்வையில் நடந்தேறியது.
இன்றுவரை நியாயமான எந்த தீர்வும் எட்டப்படவும் இல்லை.நியாயம் கிடைக்கவில்லை.அரசாங்கத்தின் பிடியில் சிக்கியவர்கள் என்ன ஆனாலும் பதில் இல்லை.
காணமல் போனவர்கள் போனவர்கள்தான்.
மனித புதைகுழிகள்,எலும்புக்கூடுகள்
என்று தொடரும் கேள்விகள் ஏராளம் பதில் கிடைப்பதில்லை.
நடந்தது இனப்படு கொலைகள் என்று ஆதாரங்கள் இருந்தும், இந்த சிறிய நாட்டில் காட்டுமிராண்டித்தனமாக யுத்த வரைமுறைகளை மீறிய அரசாங்கத்திற்கு வல்லரசு நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது ஏன்?
தமது நாட்டில் 150 பேர் இறந்தால் அது எங்களுக்கு வலித்தது.மிக வேகமாக மின்னல் வேகத்தில் தமது உரிமைகளை, மக்களை பாதுகாக்க நாங்கள் முகனூலில் அவர்கள் தேசிய கொடிப் படத்தை மாற்றி எதிர்ப்பை தெரிவித்தமை போல் அவர்கள் ஏன் எங்களில் 150,000 மக்கள் கொடூரமாக வான் வெளித்தாகுதலில் ஒரு சிறு பகுதிக்குள் பாதுகாப்பாக போகுமாறு செய்துவிட்டு கொன்று குவித்த போது ஏதுவும் தெரியாதது போல் அலட்சிய செய்கிறார்கள் என்பதுதான் எனது ஆதங்கம்.
இதே யுத்த காலத்தில் அறிக்கைகளை விட்டபடியே பிரித்தானிய அரசாங்கம் மில்லியன் கணக்கில் ஆயுதங்களையும் விற்றது.ரஷ்சிய அரசு காலாவதியான ஆயுதங்களையும்,கொத்தணிக்குண்டுகளையும் விற்றது என்பதும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது

ad

ad