புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

பழிக்குப்பழி...ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன் கைகோர்த்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி நாட்டுக்குச் சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு அழிப்பதற்கு ரஷ்யாவின் விமானப்படையின் ஒத்துழைப்பு தங்கள் நாட்டுக்கு தேவைப்படுவதாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாக அறிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், ‘பிரான்ஸ் அரசுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிப்பதில் அந்நாட்டுக்கு துணைநிற்க வேண்டியது அவசியம்’ என ரஷ்ய ராணுவத்தின் தலைமைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ரஷ்யப் போர் கப்பலில் இருந்து அதிநவீன போர் விமானங்களை ஏற்றிவருவதற்காக பிரான்ஸ் நாட்டு கப்பல்கள் அனுப்பப்பட உள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான உச்சகட்டப்போர் திட்டங்களை இறுதி செய்வதற்காக வரும் 26ம் திகதி மாஸ்கோ நகரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே விரிவான ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிரியாவின் ரக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்களை குறிவைத்து பிரான்ஸ்-ரஷ்யா விமானப்படைகளுக்கு சொந்தமான போர் விமானங்கள் நேற்று முதன்முதலாக கூட்டுத்தாக்குதலில் ஈடுபட்டன.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சொந்தமான ஆயுத கிடங்குகளும், பதுங்குமிடங்களும் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றும் அங்கு இருநாட்டு விமானப்படைகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ad

ad