புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

அமைச்சரவைக்கு வரும் ஐ.நா. தீர்மானத்துடன் உடன்படக்கூடிய யோசனைகள் ஜனாதிபதி

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் முன்வைக்கபட்டுள்ள யோசனைகளில் கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய யோசனையை
விரைவில் அமைச்சரவைக்கு
கொண்டுவரவும், கருத்து முரண்பாடு காணப்படும் யோசனைகள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராயவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இரண்டாவது
சர்வகட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொறுப்புக் கூறல், உண்மையைக் கண்டறிதல், சாதாரணத்துவத்தை நிலைநாட்டல், இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுத்தல் ஆகிய பொறிமுறைகள் தொடர்பில்
கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளின் கருத்துக்களையும் ஆலோசனையையும் பெற்றுக் கொள்வதற்காக
இரண்டாவது சர்வ கட்சி கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சர்வகட்சிகளையும் பிரதிநிதித்துவப்பத்திய பலர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அனைத்து நடவடிக்கைகளும் இலங்கை அரசமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும். எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சர்வகட்சிக் கூட்டங்களானது ஒழுக்கக் கோவைக்கு அமைவாகவும் நேர காலத்துக்கு ஏற்றவாறும் நடைபெறும்.
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள், முன்மொழிவுகள் என்பன அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, சாதாரணத்தை நிலைநாட்டல், இழப்பீடு, பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக குழுக்களை அமைக்கப்படும்.
முதலாவது சர்வகட்சிக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அரசியல் கட்சிகளிலிருந்து 12 யோசனைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை
தொடர்பில் அரசு பொது நிலைப்பாட்டிலிருந்து அனைத்து விடயங்களையும் ஆராயும்.
அதேவேளை, நாட்டின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் இப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" - என்றார்.

ad

ad