புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2015

ஜெர்மனியிலும் குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் உதைபந்தாட்டப்போட்டி நிறுத்தப்பட்டது



ஜெர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனும் அச்சுறுத்தல் காரணமாக ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி இருபது நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக  ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹானோவர் நகர் பொலிஸார் தெரிவிக்கையில்,
ஜெர்மன் நாட்டு வீரர்களுக்கும், நெதர்லாந்து நாட்டு வீரர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த கால்ப்பந்து போட்டியானது குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சுறுத்தல் இருந்தமையினால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இப்போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்கள் இருக்கும் நிலையில் மைதானத்திற்கு விரைந்த காவற்துறையினர் உடனடியாக செயற்பட்டு பார்வையாளர்களை அரங்கத்திலிருந்து வெளியேற்றினர்.
இக் கால்ப்பந்தாட்டப் போட்டியினை அந்நாட்டு அரச தலைவி மெர்க்கல் அம்மையார் பார்வையிட வருகை தருவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லண்டன் வெம்பிளி விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்து பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான நட்பு அடிப்பிலான போட்டிகள் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ad

ad